பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள…

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.