வெனிசுலாவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 1,000 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி…

வெனிசுலாவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 1,000 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் உள்ள மோரோன் நகருக்கு அருகே மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவாகின. கடந்த ஒரு நூற்றாண்டில் வெனிசுலாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களாக இவை கருதப்படுகின்றன. (a)