2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் ஆட்ட நேரத்தின் 106 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்க…

2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் ஆட்ட நேரத்தின் 106 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.மைதானத்தில் பரபரப்பு

ஆட்ட முடிவில் நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ஸ்பெயின் வீரர்கள் தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர்.

அப்போது விரக்தியில் இருந்த அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார்.

கார்சியாவின் கழுத்தைப் பிடித்து பரேடெஸ் இரண்டு முறை தாக்கினார்.

இந்த மோதலைத் தடுக்க வந்த ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் காவி ஓடி வந்தார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த பரேடெஸ், காவியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார்.

இதனுடன் அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா, தலையிட்டு காவியை கீழே தள்ளியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.Argentina players even fighting after the game, can’t believe people supported this Nazi, racist and THUGGERY team. So embarrassing pic.twitter.com/DnxaHGR9iX— Chiesa🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 (@Hazariio) July 19, 2026

இதனையடுத்து நிலைமை மோசமாவதைக் கண்ட அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிஉடனடியாக மைதானத்திற்குள் விரைந்து வந்து தன் அணி வீரர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்துச் சென்றார்.