திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ முன்வராததால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக அறுவடை செய்த நெ…

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ முன்வராததால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக அறுவடை செய்த நெல்லை வீதிகளிலும், வயல் ஓரங்களிலும் வைத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வீதிகளிலும் வயல் ஓரங்களிலும் நெல் மூட்டைகள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

கடும் செலவுகளுக்கு மத்தியில் வயல்களில் காவல் இருந்து, யானைகளின் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு அறுவடை செய்த நெல்லை தற்போது விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

“நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தற்போது யானைக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெருகல் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.