ஹட்டன் - கொழும்பு மார்க்கத்தில் 02ஆம் திகதியன்று பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, ஹட்டன் செனன் பிரதேசத்தில் வைத்து மார்க்கத்திலிருந்து விலகி தொலைபேசிக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கருத்துத் தெரிவித்த ஹட்டன் தலைமையகப்…

ஹட்டன் - கொழும்பு மார்க்கத்தில் 02ஆம் திகதியன்று பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, ஹட்டன் செனன் பிரதேசத்தில் வைத்து மார்க்கத்திலிருந்து விலகி தொலைபேசிக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கருத்துத் தெரிவித்த ஹட்டன் தலைமையகப் பொலிஸ் அதிகாரி, யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து ஹட்டன் ஊடாக நுவரெலியா நோக்கிச் சென்ற  காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகக் குறிப்பிட்டார்.

இந்த விபத்து இடம்பெற்ற வேளையில் அதில் இருவர் பயணம் செய்துள்ளதாகவும், விபத்தினால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், எனினும் மோட்டார் கார் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் காரின் சாரிக்குத் தூக்கம் ஏற்பட்டமையே இந்த விபத்துடுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் தலைமையகப் பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சுதத் எச் எம் ஹேவா