யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நெல்லியடி பகுதியில் வசிக்க…

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நெல்லியடி பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், வீட்டின் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களும் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த பிரதேச சபை உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.