ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணை விகாரையொன்றில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இறுதிச்சடங்கு நிகழ்வொ…
ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணை
விகாரையொன்றில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

