சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் AK-047 மூலம் இன்று காலை (26) வருகை தந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள…
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் AK-047 மூலம் இன்று காலை (26) வருகை தந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.பயணப்பொதிகளில் சிக்கிய பொருள்40 வயதான அந்த சந்தேகநபர், தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.இதனையடுத்து சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் "பச்சை வழி" ஊடாக எடுத்துச் செல்ல முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 630,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)