விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது. உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை, இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்பது அ…
விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது. உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை, இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.இரவு நேரத்தில் நிகழ்வதால் இலங்கையில் தெரியாது .சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நிலவு முழுமையாக மறைப்பதே 'முழு சூரிய கிரகணம்' எனப்படுகிறது.இதன்போது, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை போன்ற சூழல் உருவாகும். மேலும், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ பகுதி மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல ஒளிரும் காட்சியே இதன் தனித்துவமான சிறப்பம்சமாகும்.இருப்பினும், இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 11:16 மணிக்கு இந்த கிரகணம் நிகழ உள்ளதால், இரவு நேர காரணமாக இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இதை நேரடியாகக் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முழு சூரிய கிரகணத்தின் முதன்மைப் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்த்துகலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது.வடக்கு ஸ்பெயினில் சூரிய மறைவு நேரத்திற்கு மிக அருகில் கிரகணம் நிகழு என்பதால், அடிவானத்தில் மறையும் சூரியனோடு இணைந்த அரிய காட்சியை அங்கே காண முடியும்.ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளிலும், கிரீன்லாந்தின் ஆர்க்டிக் பனிப்பகுதிகளிலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.முழு கிரகணம் தென்படாத ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்கா, அலாஸ்கா, கனடா மற்றும் வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இது 'பகுதி சூரிய கிரகணமாக'க் காட்சியளிக்கும்.அடுத்ததாக 2027-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆனால், அந்த கிரகணமும் இலங்கையில் இருந்து தென்படாது என்றும்; வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் யேமன் ஆகிய பகுதிகளில் இருந்தே அதைக் காண முடியும் என்றும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












