கந்தளாய் - பேராற்றுவெளி பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு, ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 இலட்சம் பெறுமதியான நகை திருட்டு சம்பவம் தொடர்பில்…
கந்தளாய் - பேராற்றுவெளி பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு, ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 இலட்சம் பெறுமதியான நகை திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீட்டு உரிமையாளர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், வீட்டினுள் இருந்த அலுமாரியையும் உடைத்து, அதிலிருந்த பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைவிரல் அடையாளப் பிரிவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இதேவேளை, குறித்த பகுதியில் அண்மைக்காலமாக சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள வீடொன்றில் சூதாட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பேராற்றுவெளி பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும், இதனால் பொலிஸார் இரவு நேரங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

