விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா? இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம்…

விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா? இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியுள்ளார். இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், விடுதலை புலிகளின் தலைவரை குறித்த இந்த கருத்து தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் பேசுபொருளாகியுள்ளது. இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,