விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூட்டு விவசாய அமைப்பினால…

விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்தியில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டு விவசாய அமைப்பினால் இந்த எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குமாறும், நெல் இருப்புக்கள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்குமாறும் கோரி இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இதன்போது, நெல்லுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலையை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.