வியட்நாமில் லாம்டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து வர்த்தக மையமான ஹோ சி மின் நகருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த விபத்தில், குறைந்தது 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துப் காவல்து…
வியட்நாமில் லாம்டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து வர்த்தக மையமான ஹோ சி மின் நகருக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்த விபத்தில், குறைந்தது 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 24 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்து தேசிய நெடுஞ்சாலை 1 இன் ஊடாகப் பயணித்தபோதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனம் வீட்டின் சரிவுப் பகுதியில் மோதியதை அடுத்து தீடீரெனத் தீப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. மளமளவெனப் பரவிய தீ பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்ததால், உள்ளே இருந்த பயணிகள் வாகனத்திற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இந்தக் கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

