மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய Username அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய வசதி அறிமுகமான பிறகு, பயனர்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுடன் பகிராமல், தாங்கள் தேர்வு செய்யும் Username மூலமாகவே தொடர்புகொள்ள முடியும். இந்த அம்சம் அடுத்த சில மாதங்களில் உலகம் முழ…

மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய Username அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த புதிய வசதி அறிமுகமான பிறகு, பயனர்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுடன் பகிராமல், தாங்கள் தேர்வு செய்யும் Username மூலமாகவே தொடர்புகொள்ள முடியும்.

இந்த அம்சம் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 3 பில்லியன் பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படவுள்ளது.

எனினும், இந்த வசதி கட்டாயமல்ல. விருப்பமுள்ள பயனர்கள் மட்டுமே தங்களுக்கான Username-ஐ உருவாக்கிக் கொள்ள முடியும். மேலும், உருவாக்கிய Username-ஐ எந்த நேரத்திலும் மாற்றவோ அல்லது நீக்கவோ அனுமதி வழங்கப்படும்.

ஒரு Username-க்கு அதிகபட்சமாக 35 எழுத்துகள் அல்லது குறியீடுகளை பயன்படுத்த முடியும் என்றும், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை போலி கணக்குகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

WhatsApp கணக்கைத் தொடங்குவதற்கு வழக்கம்போல் தொலைபேசி இலக்கம் அவசியமாக இருந்தாலும், Username அம்சம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மற்ற பயனர்களால் உங்கள் தொலைபேசி இலக்கத்தை பார்க்க முடியாது.

குறிப்பாக, அறிமுகமில்லாத நபர்கள் இடம்பெறும் Group Chat-களில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை பகிர விரும்பாதவர்களுக்கு இந்த புதிய வசதி கூடுதல் தனியுரிமை பாதுகாப்பை வழங்கும் என WhatsApp தயாரிப்புத் தலைவர் அலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் தெரிவித்துள்ளார்.