யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான…

யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டிருந்தன.இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்த மன்று, அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதன்போது, குற்றவாளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சிறைத்தண்டனையை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக மாற்றுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவது நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டது.

இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை என்பதைக் கருத்தில் கொண்டு, விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.