யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவர் மற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில் தொங்கிய…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவர் மற்றும் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் நேற்று இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். விசாரணைகள் தீவிரம்
குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.
வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நபர் ஒருவர் நேற்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
அத்துடன் , யாழில் நேற்றுமுன்தினம் மன விரக்தியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றனர். விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழில் கல்சியம் நீக்கியை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அத்தியடி - யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்சியம் நீக்கியை குடித்துள்ளார். பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.












