அனுராதபுரம் - தலாவ பிரதான வீதியின் சுனாமி சந்திக்கருகில், கெப் (Cab) ரக வாகனமொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் உயிரழந்த நபர் காங்கேசன்துறை பொலிஸ…

அனுராதபுரம் - தலாவ பிரதான வீதியின் சுனாமி சந்திக்கருகில், கெப் (Cab) ரக வாகனமொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் உயிரழந்த நபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆவார்.சாரதி கைதுஇவ்வாறு உயிரிழந்தவர் ஹிதோகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.