யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதி…

யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை வழக்கு அழைக்கப்பட்டது.அதன் போது , எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்டா நீதிமன்று , 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்று தீர்ப்பளித்தது.