பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலைய…
பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்போது கருத்து தெரிவித்த அரச சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான ஒரு விடயம் குறித்து பிரதிவாதி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.விசாரணைகுறித்த மேன்முறையீடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அந்த திகதிக்குப் பின்னர் வரும் ஒரு திகதியில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, செப்டம்பர் 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பிரதிவாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 57 மில்லியன் ரூபாவை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

