Colombo (News 1st) 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் அதிவேக வீதிக் கட்டமைப்பில் மேலும் 132 கிலோமீற்றரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 04 அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடைவதை தொடர்ந்து குறித்த 132 க…
Colombo (News 1st) 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் அதிவேக வீதிக் கட்டமைப்பில் மேலும் 132 கிலோமீற்றரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 04 அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடைவதை தொடர்ந்து குறித்த 132 கிலோமீற்றர் வீதி அதிவேக வீதிக் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. மத்திய அதிவேக வீதி திட்டத்தின் முதற் கட்டமான 37 கிலோமீற்றர் நீளமுள்ள கடவத்த முதல் மீரிகம திட்டம் மூன்றாம் கட்டமான பொத்துஹெர முதல் கலகெதர வரையான 33 கிலோமீற்றர் நீளமுள்ள அதிவேக வீதித் திட்டம் என்பவற்றின் நிர்மாணப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வருட இறுதிக்குள் குருநாகல் முதல் தம்புள்ளை வரையான அதிவேக வீதித் திட்டத்தின் முதற்பகுதி குருநாகல் முதல் கலேவெல வரையான அதிவேக வீதித் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக விலைமனுக்கள் தற்போது கோரப்பட்டுள்ளதுடன் 12 பெக்கேஜ்களை கொண்டு விரைவான அபிவிருத்தி திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த செயற்றிட்டங்களுக்காக உள்நாட்டு நிர்மாண நிறுவனங்களில் சேவை பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. 38 கிலோமீற்றர் நீளமுள்ள அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு 233 பில்லியன் ரூபாவாகும். அத்துடன், 24 கிலோமீற்றர் நீளமுள்ள ருவன்புர அதிவேக வீதித் திட்டத்தையும் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிவேக வீதித் திட்டங்களுக்காக முதன் முறையாக உள்நாட்டு நிதி செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-558592_850x460.jpg)
-558570_850x460.jpg)









