நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பித்த சிறை மோதல் இன்று பல்ல சேன சிறைச்சாலை வரை நீண்டுள்ளமை குறித்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பிய நிலையில், பதில் வழங்கும் போதே அவர் இ…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பித்த சிறை மோதல் இன்று பல்ல சேன சிறைச்சாலை வரை நீண்டுள்ளமை குறித்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பிய நிலையில், பதில் வழங்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் அவர், போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள நபர்களின் சதி இதன் பின்னணி என புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தீவிர பாதுகாப்பு "குறிப்பாக மெகஸின் சிறையில் நேற்று கலவரம் இடம்பெற்றது. அதில் ஒருவர் பலியாகினார்

குருவிட்ட சிறை மோதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். தற்போது பல்ல சேனயில் மோதல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

இதனை மையப்படுத்தி அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஒன்றிணைக்கும் போது திட்டமிட்ட சதி பின்புலமாக இருப்பது தெளிவாகியுள்ளது" என அமைச்சர் விளக்கமளித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் அந்த சந்தர்ப்பத்தில் தனது கருத்துக்களை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர்,

''இது ஒரு பாரதூரமான நிலை என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

முன்னதாக இந்த சிறை மோதலை மையப்படுத்தியே நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இது தேசிய பாதுகாப்புக்கு சவால் விடும் செயற்பாடு. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நீங்கள் வெற்றி பெற்றதும் மகர உள்ளிட்ட சிறைகளில் மோதல்கள் வெடிக்க ஆரம்பித்தன.

இது குறித்து கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.