போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும்…

போதைப்பொருள் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் நேற்று(6.7.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்த 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டிற்கு மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.புனர்வாழ்வு அதன்படி, 417.48 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இலங்கை பொலிஸின் போதைப்பொருள் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டறியும் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கும் தேவையான வசதிகளை வழங்கும் திட்டம், 13.54 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும்.சுயமாக புனர்வாழ்வு பெற முன்வருபவர்களுக்காக, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் 3 மாத குடும்ப ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் வெற்றி காரணமாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சுயமாக புனர்வாழ்வு பெற முன்வரும் போக்கு கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.