COLOMBO (News 1st) நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்க இஹலகோரளை, பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள்கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப…
COLOMBO (News 1st) நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்க இஹலகோரளை, பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள்கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுநுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடபலாத்த,தெல்தோட்டை, மெததும்பர, பன்வில ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள்கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை, புளத்கொஹுபிட்டிய, அரநாயக்க, தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகள்இரத்தினபுரி மாவட்டத்தின் ஓபநாயக்க, இரத்தினபுரி, இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிதல், கற்பாறைகள் சரிதல், மரங்கள் முறிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.











