இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகு…
இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா மட்டுமே காணப்பட்டுள்ளது. சந்தேகம் எழுந்தமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினால் இந்த விசாக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.வதிவிட விசா அதன்பின்னர், அவசரமாக சீன பிரஜைகள் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, அத்தகைய விசாக்களை வழங்குவதற்கான நீண்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், எதிர்காலத்தில் இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக விசாரணையொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சீன கும்பல்இலங்கையில் செயற்படும் சீன மாபியா குழுக்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வாறு செயற்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் கொழும்பில் சீன கும்பல் ஒன்று ஆயுதமுனையில் சீன பிரஜையான கோடீஸ்வரரை கடத்தி கொலை செய்திருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.












