ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என விமல் வீரவன்சவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் வழக்குகளில் ஒரு முக்கிய திருப்பமாக முன்னாள் பொலிஸ் மா பூஜித் ஜயசுந்தர மற்று…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என விமல் வீரவன்சவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் வழக்குகளில் ஒரு முக்கிய திருப்பமாக முன்னாள் பொலிஸ் மா பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பண்டார ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விடயம் நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியது. இதற்கிடையில்,  மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் நாட்டில் திடீர் பரபரப்பு நிலை ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு உண்மையில் யார் தான் காரணம்? நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையை தொடர்ந்து திட்டமிட்டு இந்த கலவரம் முன்னெடுக்கப்பட்டதா என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றது. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,