மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் நிலவும் அதிகளவிலான இடநெருக்கடியும் ஒரு காரணியாக இருக்கலாம் என்ற போதிலும்…
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் நிலவும் அதிகளவிலான இடநெருக்கடியும் ஒரு காரணியாக இருக்கலாம் என்ற போதிலும் சதித் திட்டம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த மோதல் கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் வன்முறையைத் தூண்டுவதற்கு வெளியில் உள்ள ஏதேனும் சக்திகள் பின்னணியில் இயங்கியுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் விசாரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். போதைப்பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக சிறைகளுக்குள் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுவே கைதிகளிடையே அதிருப்தியையும் இந்த வன்முறையையும் தூண்டியிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். சிறைகளில் உள்ள நெரிசலை மட்டுமே இதற்குக் காரணமாகக் கூறிவிட முடியாது என்றாலும், அதனைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களுக்குப் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துதல் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல் போன்ற சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது சுமார் 23,000 கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட அமலாக்கத்தின் மூலம் மட்டுமே போதைப்பொருள் பிரச்சனையைத் தீர்க்க முடியாது எனவும், சமூக அளவில் போதைப்பொருளுக்கான தேவைக் குறைப்பைக் கொண்டுவர சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பு அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மஹர சிறை வன்முறையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 கைதிகள் உடனடியாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடக்க வாய்ப்பில்லை என்பதால், வெளிச்சதிகளின் பங்களிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.












