நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை அதிகளவிலான டெங்கு…
நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,980 ஆகும்.அதிஅபாய வலயங்கள்
மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 646 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட வாரியாகப் பார்க்கையில், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 18,249 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 17,048 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர.
டெங்கு பரவல் தொடரும் நிலையில், நாடு முழுவதும் 137 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.












