இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, SLS தரச்சான்றிதழ் பெற்ற பாதுகாப்பு தலைக்கவசங்களை (Helmet) அணிவதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை…
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, SLS தரச்சான்றிதழ் பெற்ற பாதுகாப்பு தலைக்கவசங்களை (Helmet) அணிவதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை பொலிஸின் வீதி பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவிக்கையில்,
2026 ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 1,626 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 1,585 விபத்துகள் பதிவாகியிருந்தன.
இந்த காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 பேரும் அடங்குகின்றனர் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் வருடாந்தம் 2,500க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும், அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோரின் மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துகளுடன் தொடர்புடையவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தலைக்கவசங்களின் பாதுகாப்புத் தரநிலைகளை உறுதி செய்வதற்காக இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI), இலங்கை பொலிஸ் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்ட நடவடிக்கைகள் அல்லது பொலிஸ் நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக மட்டும் தலைக்கவசம் அணியாமல், தங்களுடைய உயிரையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். R












