முதலமைச்சரான விஜய்யின் புகழுக்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு கெட்ட பெயராக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே சங்கீதா வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் கூறியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்…
முதலமைச்சரான விஜய்யின் புகழுக்கு, இந்த விவாகரத்து வழக்கு ஒரு கெட்ட பெயராக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே சங்கீதா வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் வெங்கடேசன் கூறியிருக்கிறார்.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, குடும்பத்தைக் கவனிக்காதவர் என்ற ரீதியில் முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்கு சஞ்சயின் பேச்சும், இப்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்ற முடிவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
சங்கீதா தற்போது லண்டனில் இருக்கிறார். அவர் விரைவில் சென்னை வர வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 25 அன்று விஜய் - சங்கீதா தம்பதியரின் 27-வது திருமண நாள் வரவுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் இணைந்து சுமுகமாக வாழ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
பெற்றோரின் இந்த முடிவால் அவர்களின் மகள் திவ்யா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 2025ல் தாக்கல் செய்யப்பட்ட மனு பிப்ரவரியில் வெளியில் கசிந்தபோதிலும், சங்கீதாவோ அல்லது மகன் சஞ்சயோ எந்த மீடியாவுக்கும் பேட்டி அளித்து விஜய்க்கு எதிராகப் பேசவில்லை.
சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தாலும், விஜய் தரப்பில் அதை எளிதாகக் கொடுத்துவிட்டுப் பிரிய விரும்பவில்லை. குடும்பத்தை பிரியக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருந்தார்.
நீலாங்கரை இல்லத்தில் இவர்கள் இருவரும் குடும்பமாக மீண்டும் ஒன்றிணைந்து வாழக் கூடிய நல்ல செய்திகள் விரைவில் வரக்கூடும். ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா இருவருக்குமே திருமண வயது நெருங்கி வரும் சூழலில், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் சிக்மா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர்கள் குடும்பமாக இணைந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார். R












