கலவான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெத்தார்கல ஆற்றின் கல்கட பகுதியில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கலவான பொலிஸ் நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரணமடைந்தவர் 16 வயதுடைய வெத்தார்கல பகுதியைச் சேர்ந்தவராவார். இந்த சம்பவம்…
கலவான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெத்தார்கல ஆற்றின் கல்கட பகுதியில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கலவான பொலிஸ் நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மரணமடைந்தவர் 16 வயதுடைய வெத்தார்கல பகுதியைச் சேர்ந்தவராவார். இந்த சம்பவம் சனிக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்தவர் தனது நண்பருடன் வெத்தார்கல ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரோடைக்குச் சிக்கி நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கலவான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
