Colombo (News 1st) ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் மங்…
Colombo (News 1st) ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் மங்கள விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.இதன்போது சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்கள் தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.2025ஆம் ஆண்டில் 650 வரையான ஏற்றுமதியாளர்களும் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் 350-இற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களும் இணைந்துள்ளதாக அவர் கூறினார்.தகவல் தொழில்நுட்பம், உணவு, குடிபானம், மரக்கறி, பழங்கள், கடல் உணவுகள், தேயிலை, பெறுமதி சேர் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளில் அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான 140-இற்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.வருடாந்தம் 1000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதே தமது இலக்காகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-558032_850x460.jpg)










