ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மனித வளங்களை வலுப்படுத்துவது மற்றும் கல்வித் துறையில் உள்ள கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்தும் இந்த ஆல…

ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மனித வளங்களை வலுப்படுத்துவது மற்றும் கல்வித் துறையில் உள்ள கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்தும் இந்த ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பாராளுமன்றத்தில் இக்குழு கூடிய சந்தர்ப்பத்தில் குறித்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக விஞ்ஞான மற்றும் கணிதப் பாடங்களுக்காக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக புதிய ஆட்;சேர்ப்பு வழிமுறையைக் கடினமாக்குவது மற்றும் ஆசிரியர் தேவை நிலவும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்குப் மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

ஆசிரியர் இடமாற்ற வழிமுறையை வெளிப்படைத்தன்மையுடனும் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின் பிரகாரமும் செயற்படுத்துவது, இடர் சேவை வழங்குவதற்கான கொடுப்பனவு வழங்கும் முறைமை மற்றும் பாடசாலைகளின் இடர்; தன்மையைத் தீர்மானிக்கும் அளவுகோல்களை மீளாய்வு செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.