அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைகளின் மூலம், சர்வதேச மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மி…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைகளின் மூலம், சர்வதேச மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை விரைவில் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த நேர்காணலில், பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், ஒருவேளை ஈரான் ஒப்பந்தத்தில் இருந்து மீண்டும் பின்வாங்கினால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.அமைதிப் பேச்சுவார்த்தை இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த நேர்மறையான தகவல்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளதோடு பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.

ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்காவும் ஈரானும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வரும் வரை ஒப்பந்தம் இறுதியாவதில் தாமதம் ஏற்படும் என ஈரானிய அரசு ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பான கப்பல் பாதை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில், பாதுகாப்பான கப்பல் பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் நேர்மறையாகத் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் குறைப்பது குறித்தும் பிராந்திய அமைதியை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசித்துள்ளார்.