இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுந்த கணிசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பின்னரே, அவரது பாதுகாப்புப் படையினருடன் அவரை உடனடியாக தாயகம் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவசரமாக வெளியேற்றம் கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவில் வசித்து வந்த யாயிர் நெதன்யாகுவைக் இலக்கு வைத்து ஈரானிய சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டதாக முன்னதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
வலதுசாரி செயற்பாட்டாளரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்துனருமான யாயிர் நெதன்யாகு, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தமை இஸ்ரேலில் பலத்த விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
குறிப்பாக காசா போர் தீவிரமடைந்த வேளையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினர் போருக்கு அழைக்கப்பட்ட நிலையில் இவர் வெளிநாட்டில் தங்கியிருந்தமை அரசாங்க எதிர்ப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, தமது மகன்களில் ஒருவரைக் கொல்ல ஈரான் முயற்சிப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்த கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அவசர வெளியேற்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.












