கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும் பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்துள்ளார்.கல்முனை வடக்கு ஆத…

கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும் பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்துள்ளார்.கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில விதிமுறைகளும் சுற்றறிக்கைகளும் எமது அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டவை அல்ல.நிர்வாகப் பிரச்சினை அவற்றில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்து, சட்டம், தொழில்சார் தேவைகள், மத உரிமைகள் மற்றும் தனிநபர் மரியாதை ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்தும் முற்போக்கானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். ஒரு நிர்வாகப் பிரச்சினையை தமிழ்–முஸ்லிம் அல்லது வேறு எந்த சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றுவதற்கும், அதன் மூலம் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை உருவாக்குவதற்கும் எவரையும் அனுமதிக்க முடியாது. இனவாதத்திற்கும் மத அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் இந்த அரசாங்கத்தில் எந்தவித இடமும் இல்லை என்பதே எங்களது உறுதியான கொள்கையாகும்.

இந்த விடயத்தில் நாம் ஏற்கனவே செயல்பட ஆரம்பித்துள்ளோம். அனைத்து தரப்பினரின் உரிமைகளையும், தொழில்சார் தேவைகளையும், தனிநபர் மரியாதையையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் முற்போக்கான, நியாயமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வை ஏற்படுத்த தேவையான அனைத்தையும் நாம் மேற்கொள்வோம் எனக் குறிப்பிட்டார்.