22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. இது குறித்து ஊடகவியலாளர்…

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிருப்தியில் மகிந்த நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அரசியலமைப்பு திருத்தம்மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர்.

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.