டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் தற்போது உள…
டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் தற்போது உள்ள ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி, அவரது போதைப்பொருள் கடத்தல் வணிக நடவடிக்கைகளுக்கு உதவிவரும் நான்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தேகநபர்களும் அடுத்த சில நாட்களில் பொலிஸ் காவலில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.டுபாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் இந்த சந்தேகநபர்களில் தற்போது டுபாயில் உள்ள ஒரு பெண்ணும் அடங்குவதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய தோழி என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பெண் குறித்து டுபாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கிடையில், பாசிக்கின் சொத்துக்களுக்கு பொறுப்பாளராக உள்ள அவருக்கு நெருக்கமான ஒருவரையும் கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், அவர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாசிக் பயன்படுத்திய தொலைப்பேசி எண்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புடைய பல நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் பெற்று வருகின்றன.












