அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முக்கியமான விஞ்ஞான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தனியார் வலையொளியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற…

அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முக்கியமான விஞ்ஞான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தனியார் வலையொளியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் காணப்பட்ட உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் பொருந்துவதாகத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபரின் அறிக்கை பாதிக்கப்பட்ட சிறுமி தனது முன்னைய வாக்குமூலத்தில், கூறப்பட்ட சில விடயங்களை குறித்த DNA பரிசோதனை முடிவு  விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரான தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து பெண்களுடையதாக சந்தேகிக்கப்படும் நீண்ட தலைமுடிகள் சிலவற்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.

எனினும், அந்த தலைமுடிகள் பாதிக்கப்பட்ட சிறுமியுடையவை அல்ல என்பது DNA பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியைத் தவிர வேறு பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறித்த மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. DNA அறிக்கை

இந்த வழக்கு தொடர்பான முன்னைய அறிக்கைகளில், சிறுமியின் ஆடைகளில் எந்தவிதமான உயிரியல் மாதிரிகளும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த DNA அறிக்கை வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் என சட்டத்துறை நிபுணர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் தற்போது விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், வழக்கு எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்திற்கு வரும் சந்தர்ப்பங்களில் கறுப்பு நிற கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இரகசியமாக வருவது தொடர்பிலும் விசாரணை அறிக்கையொன்றை கோருமாறு அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.