அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர், வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில்…

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியர், வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் மூடிய நீதிமன்ற அமர்வில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி, குறித்த பெண் வைத்தியர் தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, சந்தேகநபரால் மிரட்டப்பட்டு பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 364 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் 42 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், சிசிரிவி காணொளிகள், வைத்திய அறிக்கைகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சந்தேகநபர் கடந்த 2025 மே மாதம் பொலிஸார் தன்னைத் தாக்கியதாகவும், குறித்த பெண் வைத்தியருடனான உறவு இருவரின் சம்மதத்துடனேயே இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றம் பரிசீலித்து வருகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..