ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றது. நாட்டுக்கு வரும் சுற்ருலா பயணிகள் முதல், எமது தாயகத்தில் வாழும் உறவுகளும் விரும்பி செல்லும் இடமா…

ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றது. நாட்டுக்கு வரும் சுற்ருலா பயணிகள் முதல், எமது தாயகத்தில் வாழும் உறவுகளும் விரும்பி செல்லும் இடமாக ReeCha சுற்றுலாதலம் அமைந்துள்ளது.40 ஆண்டுகள் கழித்து ஆசை நிறைவேறியுள்ளது

இன்னிலையில் இலங்கையின் பிரபல அறிவிப்பாளரான B.H. அப்துல் ஹமீத் அவர்கள் ReeCha சென்ற நிலையில் தனது மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

1985ம் ஆண்டு, நெதர்லாந்தில்(Holland)ஒலிபரப்புத்துறைப் பயிற்சிக்காக சென்றிருந்த போது,The Hagueல் உள்ள-Madurodam-miniature parkல், உலக அதிசயங்கள், மற்றும் உலகப்புகழ்மிகு கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சின்னஞ்சிறு வடிவங்களில் அற்புதமாக படைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து வியந்தபோது, என்நெஞ்சில் ஒரு ஆசை எழுந்தது.உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்று. 40 ஆண்டுகள் கழித்து அந்த ஆசை நிறைவேறியுள்ளது. நேற்று யாழ் மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரன்(IBCபாஸ்கரன்)அவர்களது அன்பு அழைப்பினை ஏற்று, ‘இயக்கச்சி’யில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha”- இயற்கை வேளாண் கருத்துக்கருப் பூங்காவுக்குப் போயிருந்தேன். தரிசு நிலமாய்க் கடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன். வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும், தேச எல்லைகள் கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டுக் கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும், குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். வெகு விரைவில் யாழ் மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென  பதிவிட்டுள்ளார்.