தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்r குற்றம் சுமத்தியுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அர…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்r குற்றம் சுமத்தியுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அரசாங்கம் போலீசாரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தெளிவாக அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஒருபுறத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து செல்வதாக தெரிவித்துள்ளார்.எனினும் பொலிஸாரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் கட்சி ஒன்றின் பொதுச்செயலாளர் ஒரு கருத்தை வெளியிட்டவுடன் மிக வேகமாக விசாரணை நடத்தி வாக்குமூலம் அளிப்பதற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 88-89 ஆம் ஆண்டு காலப்பகுதி போல் தற்போது துப்பாக்கிச் சூடு மட்டுமன்றி வீடுகளுக்கு குண்டு வீசும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது நாட்டின் மக்களது பாதுகாப்பிற்கு பிரச்சனையாக உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத அரசாங்கம் பொலிஸார் கட்சி ஒன்றின் பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டவுடன் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசாங்கம் பொலிஸாரை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தெட்டத் தெளிவாக அம்பலமாகின்றது எனவும் அதனையே சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்திரலோகத்தில் வாழும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் தேசிய பாதுகாப்பும் பொது பாதுகாப்பும் இரு வேறு விடயங்கள் என அண்மையில் கூறி இருந்தார் எனவும், தான் இந்திரலோகத்தில் இருப்பதாக அவரே கூறியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சர்வாதிகார ஆட்சி ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.