அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த எதிர்மறையான பார்வைகளால், தற்போதைய அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவு 50% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘வெரிடே ர…
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த எதிர்மறையான பார்வைகளால், தற்போதைய அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவு 50% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘வெரிடே ரிசர்ச்’ நிறுவனம் நடத்திய ஜூலை 2026 ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.தேர்தலுக்குப் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் 65% ஆக இருந்த அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு, தற்போது 50% ஆகச் சரிந்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு 50 வீதமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளையில், 31.4 வீதமானவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் "மேம்பட்டு வருகிறது" என்று கூறுபவர்களின் விகிதம் 64 வீதத்திலிருந்து 41.63 வீதமாக ஆகக் குறைந்துள்ளது. அதேவேளை, நிலைமை "மோசமடைந்து வருகிறது" என நம்புபவர்களின் விகிதம் 15% வீதத்திலிருந்து 40.29 வீதமாக உயர்ந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 55.59 வீதமானவர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை "மோசமானது" என மதிப்பிட்டுள்ளனர். 38 வீதமானவர்கள் மட்டுமே "நல்லது" அல்லது "மிகவும் சிறப்பானது" எனத் தெரிவித்துள்ளனர். பொருளாதார நம்பிக்கைக் குறியீடு மீண்டும் மறை பெறுமதி நிலைக்குச் சென்று 'மைனஸ் 8' ஆகப் பதிவாகியுள்ளது. இக்குறியீடு 2024-இன் பாதியில் -39 ஆக இருந்தது, பின்னர் 2025 பெப்ரவரிக்குப் பின்னர் நேர்மறை நிலைக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்துக்கணிப்பு 2026 ஜூலை 11 முதல் 30 வரை நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 2,013 இலங்கை நபர்கள் இடையே நடத்தப்பட்டது.












