அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தொடுத்து வந்த தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை தற்போது டாலர் 92-ஐ விடக் குறைந்துள்ளது. அதேபோல், கடந்த விய…

அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தொடுத்து வந்த தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை தற்போது டாலர் 92-ஐ விடக் குறைந்துள்ளது.

அதேபோல், கடந்த வியாழக்கிழமையன்று  93 அமெரிக்க டொலராக காணப்பட்ட டபிள்யூ.டி.ஐ. (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையும் தற்போது 85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் இராணுவ மோதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தணிந்ததே இந்த விலை குறைப்புக்கு முக்கியக் காரணம் என்று சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்