கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த பயணத்தின் போது குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்பெயினி…

கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த பயணத்தின் போது குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்பெயினின் மற்றொரு தனித்தீவான மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த வருகை அதிகரித்துள்ளது.சட்டவிரோத நடவடிக்கைஅந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த நிலைமையை ஒரு "தாக்குதல்" என்று விவரித்துள்ளதுடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறினார்.சட்டவிரோதமாக நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கு மொராக்கோ அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக இப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.