பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான 'பிராட் பீக்' பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 வீரர்கள் மாயமாகியுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டைக்குத் பிறகு 4 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடி…

பாகிஸ்தானில் உள்ள உலகின் 12ஆவது மிக உயர்ந்த மலையான 'பிராட் பீக்' பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ் பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 வீரர்கள் மாயமாகியுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டைக்குத் பிறகு 4 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.பிராட் பீக் மலை பிரபல நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான "14 Peaks: Nothing Is Impossible" மூலம் உலகப் புகழ்பெற்ற 43 வயதான நிர்மல் புர்ஜா, உலகின் மிக உயரமான 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் ஏறி உலக சாதனை படைத்தவர் ஆவார்.

நேற்று நண்பகல் வேளையில் 8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக் மலையில் சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.மாயமான 10 பேரில் நேபாளம், பாகிஸ்தான், ஓமன், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் அடங்குவர்.இதில் 6 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.

பாகிஸ்தான் இராணுவத்தின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறப்புத் தேடுதல் குழுவினர் கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள கடினமான நிலப்பரப்பில் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்களில் இருவரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்மல் புர்ஜா உட்பட மாயமான எஞ்சிய 6 வீரர்களை மீட்க பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.