புராதன தொல்பொருள் மதிப்புமிக்க, மாணிக்கக் கற்கள் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட உலோகத்தாலான ஹனுமான் கடவுளின் சிலையை இந்தியாவுக்கு விற்கப் போவதாகக் கூறி, மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ய முயற்சித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு…
புராதன தொல்பொருள் மதிப்புமிக்க, மாணிக்கக் கற்கள் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட உலோகத்தாலான ஹனுமான் கடவுளின் சிலையை இந்தியாவுக்கு விற்கப் போவதாகக் கூறி, மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ய முயற்சித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதிபதி பசான் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் மதிப்புமிக்க ஹனுமான் விக்கிரகத்தை 2016ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கிற்குக் கொண்டு வந்து புதைத்து வைத்துள்ளதாகக் கூறி, வீடியோ மற்றும் புகைப்படங்களை வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக அனுப்பிப் பண மோசடி செய்ய முயற்சித்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயந்த பண்டார அத்துகோரள மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த சுதுஹகுருகே லியனல் ரணவீர ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதியமைச்சர் சுனில் வட்டகல செய்த முறையீட்டுக்கு அமைவாகவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முறையீட்டாளரான சுனில் வட்டகல ரகசியப் பொலிஸாருக்கு சமர்ப்பித்த வீடியோ காட்சிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, முதலாவது சந்தேகநபர் வட்டகலவின் பெயரைச் சம்பந்தப்படுத்தி தொல்பொருளை விற்று நிதி திரட்ட முயற்சித்திருப்பதுடன், சந்தேகநபர் அவ்வாறு மற்றுமொரு நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்திற்கு விடயங்களைச் சமர்ப்பித்தனர்.
முதலாவது சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக, இரண்டாவது சந்தேகநபர் குறித்த சிலையை விற்பனை செய்வதற்காக வாடிக்கையாளரைக் கண்டுபிடித்து உதவியாளராகச் செயற்பட்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவரின் பெயரை விற்றுப் பண மோசடி செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் தொல்பொருள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளனரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
இந்தப் பரிவர்த்தனையின் போது வட்டகலவின் பெயர் குறிப்பிடப்பட்டு, இந்தப் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி வட்டகலவுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்படும் வீடியோ பதிவானது சான்றுப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
