அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில் அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்ச…
அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில் அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஆரம்பித்த போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாளிப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பாதை முடங்கியுள்ளது.
பொருளாதார ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் பொருட்டு கூட்டுத் தற்காலிகப் பாதையொன்றை அமைப்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்தும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டுள்ளன. இதேவேளை, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை என்றும், பொருளாதார ரீதியிலான அழுத்தங்களையே தீவிரப்படுத்த அமெரிக்கா முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
இருப்பினும், அமெரிக்கா - ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான பயணம் இன்னும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11












