ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில…

ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன. ஈரானுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகளின் கிளர்ச்சிப்படைகளும் களமிறங்கியுள்ளன.

இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரானிய படைகள் நேற்று (29) பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானிய படைகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் அவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தவுள்ளோம். அவர்கள் பலத்த அடியைச் சந்திக்கப் போகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். (a)