கெஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரடி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்…
கெஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரடி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இத்தாக்குதலானது ஐ.நா சாசனத்தின் வெளிப்படையான மீறல் என்றும், ஐரோப்பாவைப் போருக்குள் இழுக்க இஸ்ரேலின் தூண்டுதலால் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு அத்துடன் கியீவில் உள்ளவரால் செய்யப்பட்ட இந்தச் செயலை பதிலடி கொடுக்காமல் விட்டுவிட முடியாது என ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடனான உரையாடலில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானில் இருந்து ரஷ்யாவிற்கு இராணுவ தளபாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட தடை விதிக்கப்பட்ட கப்பல்களை இலக்கு வைத்து கெஸ்பியன் கடலில் தாக்குதல் நடத்தியதை உக்ரைன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.Zelenskyy has attacked an Iranian commercial vessel, killing a sailor. A blatant UN Charter violation done at Israel's behest to drag Europe into its war. In calls with EU High Rep Kallas and FM Lavrov, made clear that what the freeloader in Kyiv did CANNOT GO UNANSWERED.— Seyed Abbas Araghchi (@araghchi) July 26, 2026 இத்தாக்குதலில் மேலும் ஒரு மாலுமி காயமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரக அதிகாரியை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், ரஷ்யா - உக்ரைன் மோதலில் தாம் நடுநிலை வகிப்பதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)