மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில் வைத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும்,…
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில் வைத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் நேற்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.கைதிகளாக பதிவுதீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு இருவரும் வெலிக்கடை சிறையில் கைதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடைகள் இருவருக்கும் வழங்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.2019 ஏப்ரல் 21 அன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விருந்தங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தங்களது அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை, கடமை வீழ்ச்சி, கொலை மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு இந்த தீர்ப்பு வழஙக்ப்பட்டுள்ளது.












